தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் வளம் வருபவர்தான் நடிகர் விஜய் சேதுபதி இவர் கதாநாயகனாக திரைப்படத்தில் நடிப்பதை காட்டிலும் வில்லனாக நடித்து பெருமளவு வெற்றி காட்டி உள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே எஸ்பி ஜனநாதன் வைரஸ் தொற்று காரணமாக காலமானார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இந்நிலையில் மறைந்த இயக்குனர் ஜனநாதன் அவர்கள் நினைவை போற்றும் வகையில் அவருடைய முழு உருவ சிலை திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதி மட்டுமின்றி பல கட்சி தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசியது என்னவென்றால் என் வாழ்க்கையில் நான் செய்த புண்ணியம் என்றால் அது எஸ்பி ஜனநாதன் இயக்கிய கடைசி திரைப்படமான லாபம் திரைப்படத்தை தயாரித்து தான்.
அதேபோல என்னுடைய சாபம் என்றால் அது அவருடைய கடைசி திரைப்படமாக அமைந்தது தான் என கூறியுள்ளார். மேலும் ஜனநாதன் கம்யூனிசத்தை செயலின் மூலமாகவும் வாழ்க்கையின் மூலமாகவும் வாழ்ந்து காட்டியவர்.
அந்தவகையில் தான் இயக்கும் திரைப்படத்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து விதைப்பதில் அவர் கெட்டிக்காரர் மேலும் ஆயிரம் வார்த்தைகளை ஐந்து வார்த்தையில் கூறுவது அவருடைய சிறந்த பேச்சு.
இதன் காரணமாகவே தன்னுடன் திரைப்படத்தில் பணியாற்றும் பொழுது வார்த்தை தெளிவாக இருக்க வேண்டும் என அடிக்கடி கூறுவது பழக்கம்தான்.