தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை நயன்தாரா. இவர் கனெக்ட், கோல்ட் படத்தை தொடர்ந்து நயன்தாரா 75, ஜவான், இறைவன் போன்ற படங்களில் படும் பிஸியாக நடித்து வருகிறார். இதில் முதலாவதாக அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்த வருகிறார்.
இதில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆக்சன் சீன்களிலும் பட்டையை கிளப்பி இருப்பதாக சொல்லப்படுகிறது இந்த படம் அவருக்கு வெற்றி பெறும் பட்சத்தில் ஹிந்தியில் பட வாய்ப்புகள் ஏராளமாக குவியும் என சொல்லப்படுகிறது இப்படி திரை உலகில் ஓடிக்கொண்டிருந்தாலும் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து படங்களையும் தயாரித்து வருகிறார்.
மேலும் பல பெரிய நிறுவனங்களில் முதலிடும் செய்துள்ளார் இதனால் நடிகை நயன்தாராவுக்கு நாளாபக்கமும் பணம் வந்து கொண்டு தான் இருக்கிறது இப்படி சம்பாதித்தாலும் மீதி நேரங்களில் தனது குழந்தை குடும்பத்துடன் பொழுதை அழகாக கழித்து தான் வருகிறார். இந்த நிலையில் நயன்தாராவுடன் நடித்த இளம் வயது நடிகை ஒருவர் நயன்தாராவின் பாசிட்டிவ் மற்றும் பிளஸ் என்ன என்பது குறித்து..
சமீபத்திய பேட்டி ஒன்றில் விலாவாரியாக கூறியிருக்கிறார் அது குறித்து பார்ப்போம்.. அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல நடிகை அனிகா தான் இவர் சமீபத்தில் தனது படத்தின் பிரமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அதில் நயன்தாரா குறித்து அவர் சொன்னது “நயன்தாரா மிகவும் கனிவானவர்”..
என்னிடம் எப்பொழுதும் அன்பாக நடந்து கொள்வார் பாசிட்டிவாக கூறினார் பிறகு நடிகை நயன்தாரா மேக்கப் போட்டுக் கொள்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வார் என நெகட்டிவ்வாக பேட்டியில் ஜாலியாக கூறியிருக்கிறார் நடிகை அனிகா. இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.