தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஹச். வினோத். இவர் இதுவரை விரல்விட்டு என்னும் அளவிற்கு தான் படங்களை கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களும் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் சதுரங்க வேட்டை என்னும் வெற்றி படத்தை கொடுத்தார்.
அதன் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற வெற்றி படங்களை கொடுத்த.. இவர் கடைசியாக நடிகர் அஜித்துடன் கூட்டணி அமைத்து துணிவு திரைப்படத்தை எடுத்தார் படம் கடந்த பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மஞ்சு வாரியர், மகாநதி சங்கர், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, மோகனசுந்தரம், அஜய், ஜான் கொக்கன்..
மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர். படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி, நல்ல மெசேஜ் என அனைத்தும் இருந்ததால் நல்லா வரவேற்பை பெற்று 250 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹச். வினோத் கமலுடன் ஒரு படம் பண்ண இருக்கிறார்.
அதேசமயம் நடிகர் தனுஷுக்கும் ஒரு கதையை இவர் கூறி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் முதலில் யாருடன் கைகோர்க்காக இருக்கிறார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.. இப்படி இருக்கின்ற நிலையில் ஹச். வினோத் அஜித், விஜய் பற்றி கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது. அஜித்துக்கும் விஜய்க்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால்..
நடிகர் அஜித்தை நீங்கள் நேரில் பார்க்கும் போது பிரமித்து போவீர்கள்.. ஆனால் விஜய் அப்படி கிடையாது சாதாரணமாக நம்மை போலவே தான் இருப்பாரு ஆனா பிரேம்குள்ள வந்தா அவர் டோட்டலா மாறிடுவாரு என கூறினார். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் காட்டு தீவு போல பரவி வருகிறது.