என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் இது.? இயக்குனர் மிஸ்கின் யார் படத்தை இப்படி புகழ்ந்து பேசுகிறார் தெரியுமா.?

msykin
msykin

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும்  இயக்குனர்களுக்கு எப்பொழுதும் சினிமாவுலகம் நல்ல மரியாதை கொடுக்கும் ஏன் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்கள் ஆக இருக்கும் பிரபலங்கள் கூட வித்தியாசமான படங்களை கொடுக்கும் இயக்குனர்களுக்கு கருத்துக்களைச் சொல்லி அசத்தி அவரை அடுத்த வழக்கு ஊக்குவித்து விடுகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் மணிகண்டன் காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக கால்தடம் பதித்தார் அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து ஆண்டவன் கட்டளை என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன்..

கைகோர்த்து எடுத்த திரைப்படம் தான் கடைசி விவசாயி என்ற படத்தை எடுத்து இருந்தார் இப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படம் மிக பொறுமையாக நகர்ந்தாலும் சில அழுத்தமான கருத்துக்களை எடுத்துக் கொடுத்துள்ளது இருப்பினும் இளம் தலைமுறை ரசிகர்கள் இந்த படத்தைக் கொண்டாட வில்லை.

ஆனால் 80, 90 காலகட்டங்களில் இருக்கும் மக்களுக்கு இந்த படம் தற்போது மிகவும் பிடித்தமான படமாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு வேடத்தில் நடித்துள்ளார் முக்கிய வேடத்தில் 80 வயது விவசாயி ஒருவர் நடித்துள்ளார் இந்த படம் வெளிவருவதற்கு முன்பு அவர் இறந்து விட்டார்.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தை இயக்குனர் மிஸ்கின் படத்தை பார்த்துவிட்டு பாராட்டித் தள்ளியுள்ளார் அதில் அவர் கூறி உள்ளது நான் பார்த்த படங்களில் இது ஒரு மிகச்சிறந்த படம் கடந்த 100 வருடங்களில் இப்படம் ஒரு மிக சிறந்த படம் இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் அப்போதுதான் நம் குழந்தைகளுக்கு நம் வாழ்க்கை புறியும் என் தாத்தா, அப்பாவை ஞாபகப்படுத்தியது இந்த படம்.

இந்த படத்தை மிக சிறப்பாக மணிகண்டன் எடுத்துள்ளார் அவருக்காக விழா எடுக்க ஆசைப்படுகிறேன் விஜய்சேதுபதியை கட்டிப்பிடித்து முத்தமிட ஆசை படுகிறேன் இந்த படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களின் காலில் விழுந்து முத்தமிட ஆசைப்படுகிறேன் என என படத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசி உள்ளார் மிஷ்கின்.

இது அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.