Vijay master movie dubbing artist : தமிழ் சினிமாவில் வளர்ந்து வளரும் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்டை திரைப்படத்தில் நடித்திருந்தார். சசிகுமாருக்கு மனைவியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த நிலையில்.தற்போது அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் அவர்களுக்கு ஜோடியாக கல்லூரி மாணவியாக மாளவிகா நடித்துள்ளார்.
சமிபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. இதனையடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி விடுவார்கள் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் ஊறடங்கு உத்தரவு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீடியாக்களில் மாளவிகா மோகனன்க்கு குரல் கொடுத்தது குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் ஆன ரவீனா ரவி தான் மாளவிகாவுக்கு குரல் கொடுத்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ரவீனா ரவி ஒரு கிடாயின் கருணை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தென்னிந்திய திரை உலகில் மிக பிரபலமான டப்பிங் ஆர்டிஸ்டாக இருந்து வருகிறார். இவர் தன்னுடைய இரண்டு வயதில் இருந்தே டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியை தொடங்கினார் என்பது குறிப்பிடதக்கது. அதுமட்டுமில்லாமல் இவரது தாய் ஸ்ரீஜா அவர்களும் மிகப்பெரிய டப்பிங் ஆர்டிஸ்ட் ஆவார். மேலும் இவர் தென்னிந்தியாவில் பல படங்களில் பிஸியாக பணியாற்றியுள்ளார். அதிலும் குறிப்பாக ஓ காதல் கண்மணி, வேலையில்லா பட்டதாரி, உத்தமவில்லன் போன்ற படங்களாகும். ரவீனா ரவி அவர்கள் தற்பொழுது “காவல்துறை உங்கள் நண்பன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
#10yearchallenge ? pic.twitter.com/uYoslEYEDP
— Raveena.S.R (@raveena116) April 13, 2020