‘வணங்கான்’ திரைப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக நடிக்க இருக்கும் நடிகர் இவர்தான்.! மாஸ் தகவல் இதோ..

vanangan
vanangan

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்து வரும் பாலாவின் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்கள் ஏராளமானவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் பொதுவாக இயக்குனர் பாலாவின் திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர், நடிகைகள் தயங்கி வருவதாக கூறப்படுகிறது. அதோட மட்டுமல்லாமல் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என முடிவெடுத்து விட்டால் எவ்வளவு கஷ்டம் பட்டாலும் பரவாயில்லை என நடிகர், நடிகைகளை கஷ்டப்படுத்தி பாலா படத்தின் காட்சிகளை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வணங்கான் திரைப்படம் உருவாகி வந்தது மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நடிகர் சூர்யா இந்த சீரியலில் விளங்கினார். இவ்வாறு நடிகர் சூர்யா விலகி இருந்தாலும் வணங்கான் திரைப்படத்தின் பணிகள் விரைவில் தொடரும் என்று இயக்குனர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

மேலும் பாலா சூர்யாவிற்கு பெரிதாக மரியாதை தரவில்லையாம் இப்படிப்பட்ட நிலையில் படப்பிடிப்பின் பொழுது நடிகைக்கு மட்டும் தான் இருக்கும் ஹோட்டலில் அருகில் இருந்த ரூமை புக் செய்து வைத்ததாகவும் நடிகர் சூர்யாவிற்கு வேறு ஒரு இடத்தில் ஹோட்டல் புக் செய்து இருந்ததாகவும் இதனால் இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட பிறகு சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையான தெரியவில்லை இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் சூர்யா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. எனவே பலரும் நடிகர் ஆர்யா நடிக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் பிறகு அதர்வா இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் தற்பொழுது சூர்யாவுக்கு பதிலாக வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜயை நடிக்க வைக்க பாலா சிபாரிசு செய்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. எனவே இது குறித்து அவரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் அப்படி அருண் விஜய் ஒப்புக்கொண்டால் பிப்ரவரி மாதம் படப்பிடிப்புகள் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.