தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் ஸ்டைலை பார்ப்பதற்காகவே பலகோடி ரசிகர்கள் இவரை பின்பற்றி வருகின்றனர். தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர்வுடன் கூட்டணியில் இணைந்து சிவாஜி, எந்திரன் ,எந்திரன் 2 போன்ற படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதிலும் குறிப்பாக எந்திரன்-1யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரிய ஒரு ப்ளாக்பஸ்டர் படமாக மாறியது. முதல் பாகத்தில் ரஜினியுடன் ஐஸ்வர்யா, சந்தானம் மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் வழக்கமான கதையிலிருந்து மாறுபட்டு சற்று வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து இயக்கியிருந்தார் இயக்குனர் ஷங்கர்.இப்படம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்தில் இசையமைப்பாளராக இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.ரத்ன வேலு ஒளிப்பதிவு செய்திருந்தார்.இந்த படம் ரிலீஸ் ஆனபோது தமிழ் திரைஉலகம் மட்டுமல்லாமல் இந்திய திரை உலகமே கண்டு வியந்து போனது, கற்பனைக்கு எட்டாத விஷயத்தை இப்படத்தில் சங்கர் அவர்கள் செய்து காட்டியிருந்தார். இதன் மூலம் ரசிகர்களை மிரள வைத்தார்.
அடுத்து இதன் இரண்டாம் பாகமும் வெளிவந்தது. இப்படமும் மக்கள் எதிர்பார்த்தபடியே மிகப்பெரிய ஒரே வெற்றி படமாக மாறியது. இப்படத்தில் அக்ஷய குமார் வில்லனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் கால்தடம் பதித்தார். இரண்டாம் பாகத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தது. vfx பணிதான் ஷங்கரின் கற்பனைக்கு உயிர் கொடுக்க கூடியதாக இருந்தது. இந்தநிலையில் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகருமான மனோஜ் அவர்கள் எந்திரன் படம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்றை போட்டு இருந்தார்.
எந்திரன் படத்தில் இரண்டு ரஜினி மற்றும் ஒரு ஐஸ்வர்யாராய் காரில் சென்று கொண்டிருக்கும் ஒரு காட்சி இருக்கும். அக்காட்சியில் இரண்டு ரஜினி இருக்க வேண்டுமென்பதால் படமாக்கப்பட்டபோது ரோபோக்கு பதிலாக பிரபல நடிகரான மனோஜ் அமர்ந்திருந்தார். அந்த காட்சியை எப்படி vfx மூலம் மாற்றப்பட்டது. இதற்கான மேக்கிங் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
#endiran @onlynikil @sureshkamatchi @kayaldevaraj @offBharathiraja pic.twitter.com/iJ23BEjyzY
— manoj k bharathi (@manojkumarb_76) April 10, 2020