தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் நடித்த பாகுபலி படம் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் சுமார் 200 கோடிக்கும் மேல் இருக்கும் பட்ஜெட் படமாக இருந்து வருகின்றன அதற்கு ஏற்றார் போல தனது சம்பளத்தையும் மிகப்பெரிய அளவில் உயர்த்தியுள்ளார்.
சொல்லப்போனால் ஒரு திரைப்படத்திற்காக சுமார் 100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் உலா வருகின்றன. சாஹோ திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்து வரும் திரைப்படங்கள் பல.. அது என்ன என்பதை இப்பொழுது பார்ப்போம். ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சாலர் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
முதலாவதாக ராதேஷ்யாம் திரைப்படம் வெளிவர ரெடியாக இருக்கிறது. இது இப்படியிருக்க நடிகர் பிரபாஸ் அடுத்தடுத்த திரைப் படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்தவகையில் நாக். அஸ்வின் இயக்கத்தில் இந்தியில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்த படம் முழுக்க முழுக்க விஞ்ஞானம் மற்றும் கற்பனையை மையமாக வைத்து உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த படத்தின் முதல்நாள் ஷூட்டிங்கில் நடிகர் பிரபாஸ் கலந்து கொண்டார் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இந்தியில் முன்னணி நடிகராக வலம் வரும் அமிதாப்பச்சன் இணைந்து உள்ளார்.
அதனால் சூட்டிங்கில் இருவரும் இணைந்து சந்தித்துக் கொண்டனர் மேலும் அமிதாப்புடன் பிரபாஸ் புகைப்படம் எடுத்துக்கொண்டார் மேலும் அமிதாப்புடன் நடிப்பது எனக்கு கனவு போல் இருப்பதாக கூறி உள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.