தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய். இவர் ரஜினிக்கு பிறகு அதிக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான விஜயின் “வாரிசு” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் வேட்டை நடத்தியது.
இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். தில் ராஜு மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்திருந்தார். வாரிசு படம் ரசிகர்கள் மத்தியில் கலமையான விமர்சனத்தை பெற்று இருந்த பொழுதிலும் அடுத்தடுத்த வாரங்களில் குடும்ப ஆடியன்ஸ் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார் அதன் விளைவாக 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது.
அதனைத் தொடர்ந்து வருகின்ற 22 ஆம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளிவந்து மக்களை மகிழ்விக்க காத்துக் கொண்டிருக்கிறது வாரிசு படம். மறுபக்கம் தளபதி விஜய் தனது 67 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் இயக்குகிறார். தளபதி 67 படத்துக்கு லியோ என் பெயர் வைத்து எடுத்து வருகின்றனர்.
முதல் கட்ட ஷூட்டிங் சென்னையில் வெற்றி கரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் தாளபதி விஜய் தனக்கு பிடித்த திரைப்படம் எது என தெரிவித்துள்ளார். வாரிசு திரைப்படம் தான் எனக்கு ரொம்பவும் பிடித்த ஸ்பெஷலான திரைப்படம் பணக்கார பின்புலத்தில் படத்தின் கதை இருந்தாலும்..
படத்தில் அதிகமாக பேசப்பட்டுள்ள எமோஷன் சீன்கள் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் தான் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக விஜய் கூறி இருக்கிறார். இந்த தகவலை அறிந்த தளபதி ரசிகர்கள் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் வாரிசு படத்தில் எங்களுக்கு பிடித்தது கூட எமோஷனல் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் சீன்கள் தான் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்