தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் இதுவரை 168 திரைப்படங்களில் நடித்துள்ளார் இப்பொழுது கூட தனது 169 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் 169 ஆவது திரைப்படத்தை நெல்சன் இயக்குகிறார் இந்த படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது இந்த படத்தில் இருந்து இதுவரை இரண்டு போஸ்டர்கள் வெளிவந்துள்ளது இரண்டுமே மக்களுக்கு ரொம்ப பிடித்து போய் உள்ளது சினிமா பிரபலங்கள் கூட ரஜினியின் போஸ்டர்களை பார்த்து லைக்குகளை அள்ளி வீசி அசத்தி வருகின்றனர்.
இந்த படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு, தமன்னா மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் முழுக்க முழுக்க சிறைச்சாலையில் நடக்கும் ஒரு பிரச்சனையை மையமாக வைத்து தான் கதை நகரும் என தெரிய வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினியின் 169 திரைப்படத்தில் நடிகை தமன்னா எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்தும் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் நடிகை தமன்னா இந்த படத்தில் ஒரு சின்ன வேடத்தில் வந்து போவது மட்டுமே தான் என சொல்லப்படுகிறது.
ரஜினியின் பேட்ட படத்தில் எப்படி த்ரிஷா ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்து போனாரோ அதேபோல நடிகை தமன்னாவும் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு சின்ன வேடத்தில் தலைகாட்டி போவோர் என கூறப்படுகிறது ஆனால் அது பெரிய அளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது இச்செய்தி அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை என்றாலும், இச்செய்தி தற்போது தீயாய் பரவி வருகிறது.