Vaadivasal : வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் வெற்றிமாறன்.. கடைசியாக எடுத்த அசுரன், விடுதலை போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து விடுதலை 2 திரைப்படத்தை எடுத்து வருகிறார் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியார் என திரைபட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.
இது தவிர வெற்றிமாறன் கைவசம் சூர்யாவின் வாடிவாசல், அஜித்துடன் ஒரு படம், விஜய் உடன் ஒரு படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார். சமீபத்தில் பருத்திவீரன் பிரச்சனை பூதாகரமாக வெடிக்க வெற்றிமாறன் அமீருக்கு ஆதரவு கொடுத்ததால் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கப்போவதில்லை என பேச்சுக்கள் பெரியதாக பரவின.
இதனால் வாடிவாசல் படத்தில் அஜித்தை நடிக்க வைக்க வெற்றிமாறன் யோசித்தாராம் ஆனால் அஜித் சூர்யாவுக்கான படம் எனக்கு இதில் நடிக்க விருப்பமில்லை என கூறிவிட்டாராம் வெற்றிமாறன் சூர்யா வந்தா ஓகே வரலன்னா வாடிவாசல் படத்தை கைவிடப்போவதில்லை. சூர்யாவுக்கு அடுத்து இந்த கதை தனுஷ் மற்றும் சிம்புவுக்கு சூப்பராக செட்டாகும் ஆனால் சிம்பு வேறு சில படங்களில் ஒப்பந்தமாக உள்ளதால் அவர் ரொம்ப பிசியாக இருக்கிறார்.
அதிகபட்சமாக தனுஷ் தான் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது வெற்றிமாறன் கூப்பிட்டாலே தனுஷ் கதை கேட்காமலேயே வந்து நடித்துவிட்டு போவார். அப்படி பார்த்தால் வாடிவாசல் படத்தில் சூர்யா வரவில்லை என்றால் அதிகபட்சமாக தனுஷ் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
கதை முக்கியமில்லை.. அஜித்துக்கு ஜோடியா என்னை போடுங்க.. இயக்குனரிடம் ஆசையை தெரிவித்த மீனா
மேலும் அமீர் 100% வாடிவாசல் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இது நல்ல கதை என்று சூர்யாவுக்கும் தெரியும் தனது ஈகோவை ஓரம் வைத்து விட்டு வெற்றிமாறனுடன் கைகோர்த்து வாடிவாசல் படத்தில் நடித்தால் சூர்யாவுக்கு ஒரு மிகப்பெரிய ஹிட் படம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..