தனுஷ் பட நடிகருக்கு இப்படி ஒரு பரிதாப நிலைமையா.! 18 வருடங்களாக நரக வேதனையை அனுபவித்த நடிகர் பேட்டி……

dhanush
dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் இவர் நடிப்பில் சமிபத்தில் வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி சினிமாவில் நடிகர் தனுஷ் அவர்கள் முன்னணி நடிகராக இருக்க காரணம் அவருடைய அண்ணன் செல்வராகவன்தான் இவர் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் தனுஷ். மேலும் நடிகர் தனுஷ் உடன் சில புதுமுக நடிகர்கள் அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனுசுடன் இணைந்து ஷெரின், அபிநய், என சில புதுமுக நடிகர்கள் நடித்திருந்தார்கள். அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து இரண்டாவது ஹீரோவாக நடிகர் அபிநய் நடித்திருந்தார்.

நடிகர் தனுஷுக்கு எந்த அளவிற்கு துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் முக்கியத்துவம் கொடுத்தார்களோ அதே அளவிற்கு தான் நடிகர் அபிநயிக்கும். அதுமட்டுமல்லாமல் தனுஷை விட அபிநயாவுக்கு நல்ல பெரும் புகழும் பெற்று தந்தது இதனை தொடர்ந்து அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் வந்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில் அடுத்த இரண்டு படத்தில் நடித்த அபிநய் இந்த இரண்டு படங்களும் கை கொடுக்கவில்லை. இதனால் அவர் கமிட்டான எட்டு திரைப்படங்களும் அவருடைய கையை விட்டு போனது இதனால் கிடைத்த வாய்ப்பும் பறிபோனது என்று நினைத்து பொலம்பியா அபிநய் வந்த பட வாய்ப்புகளில் அவ்வப்போது தலை காட்டி வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய அம்மா இறந்து போனதால் வறுமையின் கோட்டிற்கு தள்ளப்பட்டார் நடிகர் அபிநய். அதன் பிறகு வறுமையின் காரணமாக நடிகர் அபிநய் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு காலத்தை கழித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அளித்த அபிநய் இதைக் கூறி கண்ணீருடன் தெரிவித்து இருந்தார் இதை பார்த்தது பிரபலங்களும் மற்றும் ரசிகர்களும் இவருக்கு இப்படி ஒரு நிலைமையா என்று ஆறுதல் கூறி வருகிறார்கள்.