சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு நெல்சன் திலீப் குமார் சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜயின் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர்.
இதில் விஜயின் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது அதனால் ஜெயிலர் திரைப்படத்தில் அது போல் தவறு நடக்கக்கூடாது என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் பிரியங்கா மோகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும்தகவல் வெளியானது.
இந்த நிலையில் ரஜினியுடன் இணைந்து நீண்ட வருடங்களுக்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார் அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது அது மட்டும் இல்லாமல் சிவா ராஜ்குமார் விநாயகன், யோகி பாபு ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்கள் இந்த திரைப்படத்திற்கு ஸ்கிரீன் ப்ளே கே எஸ் ரவிக்குமார் மற்றும் மியூசிக் டைரக்டராக அனிருத் இணைந்துள்ளார்.
படத்தை மிகவும் பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மிகவும் பிரமாண்டமாக உருவாக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்திலிருந்து அடிக்கடி அப்டேட்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது இந்த நிலையில் ரஜினியின் பிறந்த நாளான இன்று ரஜினியை வாழ்த்தும் விதமாக சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.
ரஜினியை வாழ்த்தும் விதமாக ஜெயிலர் பட குழு ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தில் அவரின் பெயரான முத்துவேல் பாண்டியன் என்பதை அறிவிப்பதற்காகவே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.