விஜயின் “வாரிசு” திரைப்படத்தில் பிரகாஷ்ராஜின் ரோல் இதுதான்.? பழைய செல்லத்தை மீண்டும் பார்க்க போறீங்க..

vijay-
vijay-

தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 66 வது திரைப்படம் ஆன வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிறது இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜு தயாரிக்கிறார்.

முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது. படப்பிடிப்பு தளத்திலிருந்து அதன் புகைப்படங்கள் கூட வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என பட குழு திட்டமிட்டமாக சொல்லி உள்ளதால் படபிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்தப் படத்தில் யார் யாருக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது குறித்து அண்மை காலமாக தகவல்கள் வெளி வருகின்றன.

அந்த வகையில் இந்த படத்தில் பிரகாஷ்ராஜுக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது குறித்தும் தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது.  சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரகாஷ்ராஜ் இந்த படம் குறித்து பேசினார் அதில் அவர் சொன்னது விஜய் உடன் இணைந்து நடித்து 15 வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளது இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பதை சொல்லக்கூடாது.

உங்க செல்லம் திரும்ப வரப்போகிறது என கூறி உள்ளார் அப்படி என்றால் இந்தப் படத்தில்  வில்லனாக பிரகாஷ்ராஜ் நடிப்பது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்படுகிறது. பிரகாஷ்ராஜ் விஜய் உடன் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான் அந்த வரிசையில் வாரிசு திரைப்படம் வெற்றி படமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.