தனது வில்லத்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களை மிரட்டிய பூஜாவா இது..! தற்போது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..?

pooja-4

சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பாக சீரியலில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் நடிகை பூஜா அந்த வகையில் இவர் நடிக்கும் காட்சியை பார்த்த பலரும் பூரித்துப் போனது மட்டுமில்லாமல் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.

இவ்வாறு பிரபலமான நடிகை திடீரென சீரியலில் நடிக்காமல் தலைமறைவாகி விட்டார். அந்த வகையில் கடந்த வருடம் பேட்டி ஒன்றில் பேசிய பூஜா அவர்கள் நான் சீரியலில் நடிக்கும் போதுதான் வில்லியாக நடித்தேன் ஆனால் நான் உண்மையில் மிகவும் ஜாலியான கேரக்டர்.

அதுமட்டுமில்லாமல் எனக்கு சண்டை போடுவது என்றாலே சுத்தமாக பிடிக்காது. மேலும் என்னுடைய தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர்கள் கன்னட மொழியில் ஜூனியர் ஆர்டிஸ்ட் என்பதன் காரணமாக தான் எனக்கும் இந்த நடிப்பின் மீது ஆர்வம் வந்தது. இந்நிலையில் நான் தற்போது பெங்களூரில் மிகவும் ஜாலியாக இருந்து வருகிறேன்.

அதுமட்டுமில்லாமல் தனக்கு தன்னுடைய 14 வயதிலேயே சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் கன்னட திரைப்படங்கள் மற்றும் சீரியலில் பெரும்பாலும் நடித்து வந்த நமது நடிகை குங்குமம் என்ற சீரியலில் நடித்ததன் மூலமாக தமிழில் மிகவும் பிரபலமாகி விட்டார்.

pooja-2
pooja-2

ஆனால் தமிழ்  சீரியலில் நடிக்கும் போது தனக்கு எதிர்மறையான கதாபாத்திரம் மட்டுமே கொடுக்கப்பட்டது இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் என்னுடைய முகத்திற்கு நெகட்டிவ் கதாபாத்திரம்தான் மிகவும் நன்றாக பொருந்தியது. ஆனால் நான் நடிப்புக்காக இப்படி நடித்திருந்தாலும் ரசிகர்கள் என்னை கண்டமேனிக்கு திட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

மேலும் சீரியலில் நடிக்கும் பொழுது காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றிய நமது நடிகை தான் நடிக்கும் சீரியலுக்கு தனக்கான காஸ்ட்யூமை தானே டிசைன் செய்ய ஆரம்பித்தார் அதுமட்டுமில்லாமல் தான் நடிக்கும் சீரியலில் நடக்கும் பல்வேறு பிரபலங்களுக்கும் நானே காஸ்ட்யூமை செய்து கொடுத்தேன்.

pooja-1

இந்நிலையில் தற்போது கனடாவில் டரிஸ்ட் கன்சல்டன்ட் ஆக பணியாற்றி வருவதாக பூஜா கூறி உள்ளார். இந்நிலையிலும் தனக்கு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்து கொண்டே இருக்கிறது.  அதுமட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்கள் யாரேனும் என்னை பார்த்தால் மறுபடியும் வாங்க என அழைப்பது வழக்கமாகி போய்விட்டன. உங்களுக்காகவே நான் ரீ-என்ட்ரி கொடுக்க ஆசைப்படுகிறேன் அதுவரை கொஞ்சம் காத்திருங்கள் என பூஜா கூறியுள்ளார்.

pooja-3