நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், வசூலில் அடித்து நொறுக்கியது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படத்தை மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக கொடுக்க நடிகர் அஜித்குமார்.
மீண்டும் ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செல்லில் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படம் பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகி வருகிறது. படத்திற்காக நடிகர் அஜித் குமார்.
20 லிருந்து 25 கிலோ உடல் எடையை குறைத்து ஒரு புதிய லுக்கில் வளம் வருகிறார் மேலும் இந்த படத்தில் அஜித் பல புதிய லுக்கில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, இளம் நடிகர் வீரா போன்றோர் நடித்த வருகின்றன முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் வெகு விரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது.
அஜித் தற்போது ஐரோப்பிய நாடுகள் பக்கம் சுற்றி திரிந்து வருகிறார் அதன் புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து ரசிகர்களை கொண்டாட வைக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் விஷால் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் குறித்து பேசியுள்ளார். அஜித் சினிமா உலகில் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறார். நாங்களும் அதே துறையில் தான் இருக்கிறோம்.
ஆனால் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை.. எப்போதும் unavailable இருக்கிறார். ஒரு விஷயத்திற்காக நான் அஜித்தை தொடர்பு கொண்டு பேசலாம் என பார்த்தேன். ஆனால் அஜித்தை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அஜித்தை தொடர்பு கொள்ள அவரது PR சுரேஷ் சந்திராவை ரீச் செய்ய பார்த்தோம் அவரையும் தொடர்பு செய்ய முடியவில்லை அஜித் எப்பொழுதும் unavailable இருக்கிறார். இதுதான் அஜித்திடம் பிடிக்காத ஒன்று என வெளிப்படையாக கூறியுள்ளார் விஷால்.
I dnt like this thing in #Ajith Says #Vishal pic.twitter.com/nF6GeFP14r
— chettyrajubhai (@chettyrajubhai) July 7, 2022