கன்னட நடிகரான கிச்சா சுதீப் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருகிறார் கன்னட சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் இவர் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.
குறிப்பாக தமிழில் இவர் நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார் அதனைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி திரை படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் அதனை தொடர்ந்து நடிகர் சுதீப் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சுல்தான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இப்போது அவரே தயாரித்து நடித்துள்ள திரைப்படம் விக்ராந்த் ரோணா. இந்த படத்தில் வித்தியாசமாகவும் அதே சமயம் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் நேற்று தனுஷ் தமிழில் ரிலீஸ் செய்தார். ஒவ்வொரு காட்சியும் மிரட்டும் வகையில் உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவலில் அதிகரித்துள்ளது.
ஒரு வழியாக படம் வருகின்ற ஜூலை 28 தேதி வெளியாக இருக்கிறது. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது எப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் படம் குறித்து சில விளக்கமான தகவல்களை கொடுத்தார் அதே சமயம் ரஜினி குறித்தும் அவர் பேசி உள்ளார்.
நான் ரஜினியின் தீவிர ரசிகர் அவரை நேரில் பார்க்கும் பொழுது நான் எதிர்பார்த்ததை விட அவர் வித்தியாசமாக இருந்தார் ஆம் மிகப்பெரிய ஒரு சூப்பர் ஸ்டார் என்கின்ற ஆதிக்கம் இல்லாமல் மிக எளிமையாக தன்மையாக பழகினார் அது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது இதை பார்க்கும் பொழுது அவருடைய தீவிர ரசிகராக இன்னும் மாறிக் கொண்டே இருக்கிறேன் என கூறினார் ரஜினி உச்சத்தில் இருக்க காரணம் அவருடைய தன்னடக்கம் பண்பு தான் காரணம் என கூறினார்.