இது வீடா இல்ல 5 ஸ்டார் ஹோட்டலா இவ்ளோ பிரம்மாண்டமா இருக்கு.! வைரலாகும் மாதவனின் வீடு புகைப்படம்

madhavan
madhavan

தமிழ் சினிமாவில் மேடி என்று அன்போடு அழைக்கப்படுபவர் மாதவன். இவர் எழுத்தாளர் பட தயாரிப்பாளர் தொகுப்பாளர் என பல திறமைகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தமிழை தாண்டி ஹிந்திகளிளும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் நான்கு தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகளை வென்றுள்ளார் அது மட்டும் இல்லாமல் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார்.

மாதவன் முதன் முதலில் தொலைக்காட்சி தொடர்களில் தான் நடித்து வந்தார் அதன் பிறகு 1997 ஆம் ஆண்டு ஆங்கில திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் தொடர்ந்து தமிழ், ஹிந்தி, கன்னடம் மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இந்த நிலையில் 2000ம் ஆண்டு மாதவன் தமிழில் முதன் முதலாக அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தின் மூலம் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். இதனை தொடர்ந்து என்னவளே, மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம், என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 2003 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகிய ஜெஜெ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அது மட்டும் இல்லாமல் மாதவன் நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு திரைப்படமான  ராக்கெட்ற்றி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் மாதவன் படத்தை இயக்குவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் தற்பொழுது மாதவன் தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான வேலையை தொடங்கிவிட்டார். இப்படி இருக்கும் நிலையில் தான் புதிதாக கட்டியுள்ள வீட்டின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் தான் புதிய திரைப்படத்திற்கான கதையை எழுத ஆரம்பித்து விட்டேன் என்று பதிவு செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது வீடா இல்லை 5 ஸ்டார் ஹோட்டலா என மிகவும் பிரமாண்டமாக இருப்பதாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.