நயன்தாராவின் ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்.? முடிக்கவே பல மணி நேரம் ஆகும் போல..

nayanthara

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் தனது திரை பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் டாப் ஹீரோக்களாக இருக்கும் நடிகர்களுடன் நடிப்பதால் இவருடைய மார்க்கெட் இறங்கியதே கிடையாது மேலும் தென்னிந்திய சினிமாவுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரையும் அவர்தான் தகவல் வைத்துக் கொண்டுள்ளார்.

இப்படிப்பட்ட நயன்தாராவுக்கு 2023 ஆம் ஆண்டு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது கைவசம் நயன்தாரா 75, டெஸ்ட், இறைவன், ஜவான் போன்ற படங்கள் இருக்கின்றன. இதில் முதலாவதாக ஜவான் திரைப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து யோகி பாபு, ஷாருக்கான், பிரியாமணி, சானியா மல்கோத்ரா மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் நயன்தாரா பெருமளவு கிளாமர் காட்டி நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது இந்த படம் நயன்தாராவுக்கு மிகப்பெரிய படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நயன்தாராவுக்கு வயது அதிகமாகிக் கொண்டே போனாலும் அவருடைய பிட்னஸ் மற்றும் அழகு எப்பொழுதுமே குறைந்ததே கிடையாது நயன்தாரா எப்பொழுதுமே தனது உடலை சரியாக மெயின்டைன் செய்து வருவது தான்..

அவருடைய வெற்றிக்கு காரணம் என பலரும் கூறி வருகின்றனர். அண்மையில் 70 கிலோ எடையிலிருந்த நயன்தாரா தற்போது அதிரடியாக தனது உடலை குறைத்துக் கொண்டே வருகிறாராம் இப்படி உடம்பை செம்ம ஃபிட்டாக வைத்திருக்க காரணம் வொர்க் அவுட் மற்றும் யோகா இரண்டிலும் நயன்தாராவின் உடலை குறைக்க மிகவும் உதவுகிறதாம்.

குறிப்பாக யோகா நயன்தாராவின் பிட்னஸுக்கு அதிகம் கை கொடுக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் யோகா செய்கிறாராம் நயன்தாராவின்  டயட் பிளானில் கண்டிப்பாக இளநீர் இருக்குமாம் தினமும் வொர்க் அவுட் முடிந்துவிட்டு வெறும் வயிற்றில் இளநீர் அருந்துவாராம். நயன்தாராவின் காலை உணவில் கண்டிப்பாக ஸ்முத்தி  இருக்குமாம்..

nayanthara
nayanthara

இது உடல் எடையை குறைக்கவும், எனர்ஜியை கூட்டமும் உதவுகிறது நயன்தாராவின் மதிய உணவில் இறைச்சி, முட்டை, காய்கறிகள் என அனைத்தும் சமமாக இருக்குமாம்   கார்போஹைட்ரேட் உணவுகளை முற்றிலும் தவிர்த்து வருகிறாராம் நயன்தாரா ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூக்கம் பழக்கத்தை நயன்தாரா வைத்துள்ளார் சரியான தூக்கம் உடல் எடையை குறைக்க மிகவும் அவசியம் இதைப் தான் நயன்தாராவின் ஃபிட்னஸ் சீக்ரெட் என கூறப்படுகிறது.