நயன்தாராவிடம் இருக்கும் மிகப்பெரிய மைனஸ் இதுதான்.. சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரபல நடிகர்.?

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோயின்னாக திகழ்வர்  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ஓடிக் கொண்டிருக்கிறார். இதனால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது மேலும் ரசிகர்களும் குறைந்தபாடு இல்லாமல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

இப்படி ஓடிக்கொண்டிருந்த நயன்தாரா  ஒரு கட்டத்தில் சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது பின் வெளி உலகத்திற்கு தெரியாமல் மறைமுகமாக இருந்தனர் ஆனால் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர் பிறகு இயக்குனர் பிரபுதேவா உடன் காதலில் இருந்தார்.

திருமணம் செய்யும் நிலைமைக்கு நயன்தாரா சென்றார் ஆனால் பிரபு தேவாவின் முதல் மனைவி தொடர்ந்து பிரச்சினையை பெரிய விஷயமாக மாற்றிவிட்டார் இதனால் நயன்தாரா பிரபுதேவாவையும் கழட்டி விட்டு வெளியேறினார் அதன் பிறகு படங்களில் நடிப்பதை மட்டுமே கவனம் செய்து வந்த நயன்தாரா திடீரென நானும் ரவுடிதான்.

திரைப்படத்தின் போது விக்னேஷ் சிவனை காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர் மேலும் பட வாய்ப்பு கைப்பற்றி நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நயன்தாரா பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

நயன்தாரா அன்புடன் பழகுபவர்களுக்கு அன்பை கொடித்தீர்க்கும் குணம் கொண்டவர் அப்படி பிரபுதேவாவின் மீது அதிக காதலால் கையில் அவர் பெயரை டாட்டூ குத்தினார். மேலும் பிரபுதேவா கடனில் இருந்த போது அந்த கடனை எல்லாம் அடைத்தார் என சொல்லப்படுகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உறுதியான தகவல் என்று தெரியவில்லை. மேலும் தனக்கு பிடித்தவர்களுக்கு காசையும், அன்பையும் வாரி வழங்கக்கூடியவர் என சொல்லப்படுகிறது.