எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பிரபலம் இவர் தான்.! “குக் வித் கோமாளி சிவாங்கி” வெளிப்படை.. அப்ப அஸ்வின் இல்லையா.!

sivangi
sivangi

வெள்ளித் திரையில் நடிக்க ஆசைப்படும் பல நடிகர் நடிகைகளுக்கும் சின்னத்திரை ஒரு முக்கிய அடித்தளமாக அமைகின்றன. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வெள்ளித்திரையிலும் சிறப்பாக பயணித்து வருகின்றனர்.

அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் சிவாங்கி பின்பு இவர் பிரபல காமெடி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி முதல் சீசனில் கலந்து கொண்டு மக்களை என்டர்டைன்மென்ட் செய்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் அடைந்தார். முதல் சீசனை தொடர்ந்து தற்போது வரை ஒவ்வொரு சீசனிலும் கலந்து கொண்டு சிறப்பாக பயணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிதும் பிரபலமடைந்த சிவாங்கி தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த டான் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் போற்றப்படும் வகையில் இருந்தது.

சினிமாவுலகில் நடிப்பைத் தவிர தனது குரல் வளத்தினால் பாடல்களையும் பாடி அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்தநிலையில் சின்னத்திரை குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் பங்கு பெற்ற அஸ்வின் தனது கிரஷ் என சுத்தி வந்த சிவாங்கி தற்போது தனது புதிய கிரஷை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட சிவாங்கி சாய்பல்லவியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு எனது க்கேள் கிரஷ் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றன.