தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் அதன் பிறகு கார்த்திக்கை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இவ்வாறு உருவான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது.
அதன்பிறகு இவர் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் எனும் திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில் அந்த திரைப்படத்தையும் பிரமாண்டமாக இயக்கி மாபெரும் வெற்றி கண்ட நமது லோகேஷ் அதன் பிறகு கமலுடன் இணைவதற்கான வாய்ப்பை பெற்றார்.
அந்த வகையில் சமீபத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக இயக்கி மாபெரும் வெற்றி கண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய்யை வைத்து அவருடைய அறுபத்து ஏழாவது திரைப்படத்தை இயக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என படகுழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள் இந்நிலையில் தளபதி விஜயின் இந்த திரைப்படத்தை இயக்குவதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெறும் 10 கோடி மட்டுமே சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் கமலை வைத்து இயக்கிய விக்ரம் திரைப்படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்கிய நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் அந்த திரைப்படத்தை பிறகாக அவருடைய ரேஞ்சே மாறியதன் காரணமாக அவருடைய சம்பளத்தை 12 கோடியாக மாற்றியுள்ளார். இந்நிலையில் மறுபடியும் தன்னுடைய சம்பளத்தை 10 கோடி என தயாரிப்பாளர் கூறியதன் காரணமாக லோகேஷ் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார் என கூறி உள்ளார்கள்.