என்னை வேண்டாம் என தூக்கி எறிந்த நடிகர்களுக்கு நான் சொல்லும் பதில் இதுதான் – வாணி போஜன் பேட்டி.!

vani-bhojan
vani-bhojan

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் படையெடுபோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பிரியா பவானி சங்கர், வாணி போஜன் ஆகியோர்கள் தற்பொழுது தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து ஓடிக் கொண்டிருக்கின்றன குறிப்பாக வாணி போஜனுக்கு இந்த வருடம் மட்டுமே சுமார் ஏழு எட்டு படங்கள் இருக்கின்றனவாம்

ஆரம்பத்தில் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் இவரது படங்கள் வெற்றியை ருசிக்கவில்லை இவருக்கு நல்ல கம்பேக் கொடுத்த திரைப்படமாக அமைந்தது தான் ஓ மை கடவுளே.. இந்தப் படத்தை தொடர்ந்து தற்பொழுது அவருக்கு வாய்ப்புகள் அதிகமாக குவிந்து வருகிறது இப்பொழுது கூட தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

இது அவருக்கு ஒரு நல்ல படமாக அமையும் என சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களை கொடுத்துள்ளார் சின்னத்திரையில் இருந்து பல நடிகர் நடிகைகள் வெளிவந்து தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கின்றனர்.

அவர்களைப் போலவே சின்னத்திரையில் இருந்து நானும் வந்துள்ளேன் ஆரம்பத்தில் சின்ன திரையில் இருந்து வந்ததால் என்னை ஒரு சில நடிகர்கள் நிராகரித்தனர் மேலும் படங்களில் கமிட் ஆகி அக்ரிமெண்ட் எல்லாம் போடப்பட்டு பிறகு என்னை படத்திலிருந்து நீக்கி உள்ளனர். இப்படி பல தடைகளை தாண்டி தான் தற்பொழுது ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.

அப்பொழுது என்னை நிராகரித்த நடிகர்கள் மீண்டும் என்னை அவரது படங்களில் நடிக்க வைக்க வாய்ப்பு கேட்கின்றனர் ஆனால் நான் தற்பொழுது அவர்களது படங்களிலிருந்து விலகிக் கொள்கிறேன் என வெளிப்படையாக பேசி உள்ளார். இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி  வருகிறது.