என்னுடைய முதல் ஹீரோ இவர் தான்.! அப்புறம் தான் பிரசன்னா.. பேட்டியில் உண்மையை சொன்ன சினேகா.!

sneha-
sneha-

90 காலகட்டங்களில் பல்வேறு டாப் நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து வெற்றி மேல் வெற்றியை சம்பாதித்தவர் நடிகை சினேகா. குறிப்பாக கிராமத்து கதைகளில் உள்ள படங்களில் இவர் நடிக்கும் அழகே தனி. பாவாடை தாவணியில் செம அழகாக ஆள் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல் செம சூப்பராக இருப்பார்.

மேலும் இவர் நடிப்பு செம சூப்பராக இருக்கும் அதனால் 90 காலகட்டங்களில் அதிக வெற்றிப் படங்களை கொடுத்தார் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இப்போது இருவருக்கும் இரு குழந்தைகள் உள்ளது.

சினேகா அம்மாவான பிறகும் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் வந்துள்ளது அந்த காரணத்தினால் நடிகை சினேகா ஜிம்மே கதியேன கிடந்து அதிரடியாக உடல் எடையை குறைத்து தற்பொழுது சின்ன பெண் போல் மாறி பட வாய்ப்புக்காக காத்து கொண்டு இருக்கிறார். மேலும் தொடர்ந்து இணையதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் பிரசாந்தின்  பிறந்தநாள் அண்மையில் கொண்டாடப்பட்டது. அதற்கு பிரபல தனியார் இணையதளம் நடத்திய பேட்டி ஒன்றில் பிரசாந்துடன் சினேகா கலந்துகொண்டு பிரசாந்த் பற்றிய சில அனுபவங்களை பகிர்ந்து உள்ளார் அதில் அவர் கூறியது :

என்னுடைய முதல் ஹீரோ யார் என்றால் அது பிரசாந்த் தான் அவர் படத்தில் நடிக்கும்போது புதுமுக நடிகை என்றும் பாராமல் சகஜமாகப் பேசினார் அப்படிப்பட்ட நடிகர் படத்தில் அறிமுகமாகியது என் வாழ்நாளில் ஒரு நல்ல அனுபவம் என கூறினார் சினேகா.