தற்போது திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சித்தார்த். இவர் நடிப்பையும் தாண்டி அரசியலில் கவனம் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் யாருக்கும் பயப்படாமல் மனதில் தோன்றியதை மிகவும் தைரியமாக மீடியாவில் பகிர்ந்து வருவதால் பலர் இவரை பாராட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது பிஜேபிக்கு எதிராக வெளியிடும் ஒவ்வொரு டுவிட்டும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதன் காரணமாக இவருக்கு அரசியல்வாதிகள் மிரட்டல் விடுத்து வருவதாக சமீபத்தில் கூறி இருந்தார். இருந்தாலும் சித்தார்த்த அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எப்பொழுதும் போல தனது கருத்துக்களைப் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்த வகையில் தற்பொழுது மத்திய அரசிற்கு எதிராக கருத்து பதிவிட்டு வந்ததால் கொலை மிரட்டல் வந்துள்ளது.
இந்நிலையில் பொதுவாக சித்தார்த் நல்ல தரமான கதை உள்ள பல திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்.
இந்நிலையில் சித்தார்த் ரசிகர்கள், நடிகர்கள்,நடிகைகள் என்று பலரையும் கவர்ந்துள்ளார்.அந்த வகையில் தளபதி விஜய்க்கும் இவரை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தளபதி விஜய் ஒரு பேட்டியில் சித்தார்த்தை எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றும் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களையும் தவறாமல் பார்த்து விடுவேன் என்றும் கூறியுள்ளார்.