விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது இது வரை ஐந்து சீசன்கள் நிறைவடைந்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது இதனை தொடர்ந்து கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆறாவது சீசனின் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஆரம்பித்தன. தற்போது சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி அசிம், ரக்ஷிதா, மைனா நந்தினி, மணிகண்டன், ஆயிஷா, ஜனனி, அமுதவாணன்..
மற்றும் கதிரவன், விக்ரமன், ஏ டி கே, தனலட்சுமி, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர் போன்ற போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்ற வாரம் ஷெரினா வெளியேறினார். எலிமினேட் ஆகி வெளியேறிய ஷெரினா பிக் பாஸ் வீட்டிலிருந்த அனுபவங்களை பேட்டி கொடுத்து வருகிறார்.
அப்படி அவரிடம் ஒரு பேட்டியில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஒன்றாக கதிர் மீது உங்களுக்கு கிரஷ் இருக்கிறதா? என்று கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த ஷெரினா எனக்கு கதிர் ஒரு நல்ல நண்பர் தான் என கூறினார் மேலும் பேசிய அவர் அசீம் எனக்கு அண்ணன் மாதிரி.
இதை நான் பிக் பாஸ் வீட்டிலேயே கூறியிருக்கிறேன் மற்றும் பிக் பாஸ் வீட்டில் குயின்சி மற்றும் ஆயிஷா இருவரும் எனக்கு நல்ல நண்பர்கள் இவர்களுடைய நட்பை நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் தொடர நினைக்கிறேன் என கூறினார். மேலும் பேசிய ஷெரினா பிக் பாஸ் வீட்டில் எனக்கு ஒருவர் மீது கிரஷ் இருக்கு அவர்தான் பிக் பாஸ் என கூறியுள்ளார்.