தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் உலகநாயகன் கமலஹாசன் இவர் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தி விட்டாலும் அந்த திரைப்படங்கள் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்வதால் சினிமா உலகில் இன்னும் பயணித்து வருகிறார்.
இவரைத் தொடர்ந்து இவரது இரு மகள்களான சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோரும் தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி பிற மொழி பக்கங்களிலும் கதையை நன்கு அறிந்த நடித்து வருவதால் அவர்களுக்கான வரவேற்பு நன்றாகவே இருக்கிறது.
கமலும் தனது மகள்களுக்கு ஏற்றவாறு இன்னும் சினிமாவில் பயணிக்கிறார் அந்தவகையில் இவர் விக்ரம் மற்றும் அடுத்த ஒரு புதிய படத்திலும் கமிட் ஆகியுள்ளதால் தற்போது குடும்பமே சினிமாவில் நடித்து வருகிறது.
இந்த நிலையில் நடிகை சுருதிஹாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறி உள்ளார் அவர் தெரிவித்தது. எனது அப்பா தமிழ் சினிமாவில் சிறப்பாக ஜொலித்து வருகிறார் அவர் பல படங்களில் நடித்து உள்ளார் ஆனால் அவரது படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது அதிலும் குறிப்பாக மகாநதி திரைப்படம் தான்.
அதை தொடர்ந்து சொல்ல வேண்டும் என்றால் அவர் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் மற்றும் விருமாண்டி திரைப்படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.மேலும் பலவிதமான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.