பொன்னியின் செல்வன் கதையில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் இதுதான்..! அதில் நடிக்கவே ஆசைப்பட்டேன் – கமல் பேச்சு.

kamal
kamal

சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கிறது ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே ஒரே மாதிரியான கனவு இருந்துள்ளது. அது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுக்கும் அந்த வகையில் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க தமிழ் சினிமா உலகில் பலர் ஆர்வம் காட்டினார்.

ஆனால் அந்த படத்தை எடுக்க பலரால் முடியாமல் போக கடைசியாக ஒரு வழியாக மணிரத்தினம் பல்வேறு தடைகளை தாண்டி பொன்னியின் செல்வன் நாவலை தற்போது இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கு முன்பாக ரசிகர்களையும் மக்களையும் கவர்ந்திழுக்க படக்குழு தொடர்ந்து போஸ்டர் பாடல் டீசர் போன்றவற்றை..

வெளியிட்ட நிலையில் நேற்று பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச் வெகு விமர்சியாக சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்டது. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் சிறப்பு விருந்தினராக ஷங்கர், ரஜினி, கமல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்பொழுது பேசிய உலகநாயகன் கமலஹாசன் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முதலில் ஆசைப்பட்டதே எம்ஜிஆர் தான் அந்த ரைட்சும் அவரிடம் இருந்தது ஆனால் பிறகு அதை நான் வாங்கினேன். அப்பொழுது எம்.ஜி.ஆர் பொன்னியின் செல்வன் படத்தை சீக்கிரம் எடு என கூறினார் ஆனால் அது நடக்காமல் போனது.

எனக்கும் சரி ரஜினிக்கும் சரி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை ஆனால் சிவாஜி அவர்கள் வந்தியதேவனாக ரஜினி நடித்தால் சூப்பராக இருக்கும் அருண்மொழிவர்மனாக நீ நடித்தால் நன்றாக இருக்கும் என கூறினார் ஆனால் அது நடக்காமல் போனது எப்படியோ மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை சிறப்பான முறையில் எடுத்து உள்ளார் என மணிரத்தினத்தை புகழ்ந்து பாராட்டினார் கமல்..