தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து இவர் மலையாளம், ஹிந்தி, தமிழ் போன்ற பல்வேறு மொழி படங்களில் கமீட்டாகி நடித்தார்.
அதில் ஒரு சில திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் ரசிகர்கள் பெரிதும் தற்பொழுது எதிர்பார்க்கும் திரைப்படம் என்றால் ஜவான் மற்றும் கனெக்ட் ஆகிய இரண்டு திரைப்படங்களை மட்டும் தான் அதில் முதலாவதாக கனெக்ட் திரைப்படம் வெளியாக இருக்கிறது. கனெக்ட் படத்தில் நயன்தாராவுடன் கைகோர்த்து சத்யராஜ், வினய் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
அண்மையில் கூட கனெக்ட் படத்தின் ஸ்பெஷல் ஷோ ஒன்று திரையில் போடப்பட்டது அதைப் பார்க்க நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர்கள் வந்தனர் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பெரிய அளவில் வைரலானது. அதனைத் தொடர்ந்து கனெக்ட் திரைப்படம் குறித்தும், வாழ்க்கை குறித்தும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் ஒன்றாக.. தனது கணவர் விக்னேஷ் சிவன் 2 கிப்ட் கொடுத்தார் என சொன்னார் அதாவது வி எழுத்தில் இருக்கும் பிரேஸ்லெட் மற்றும் வாட்சை கொடுத்ததாக நயன்தாரா சொன்னார் மேலும் பேசிய அவர் நடிகர் சத்யராஜ் குறித்தும் சொல்லி உள்ளார்.
அவரை பார்க்கும்போது எல்லாம் அப்பா போலவே எனக்கு தோன்றும் என மனம் திறந்து நிகழ்ச்சியுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூறியுள்ளார். இவர்கள் இருவரும் இதற்கு முன்பாக ராஜா ராணி திரைப்படத்தில் அப்பா மகளாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.