என்னுடைய கனவு திரைப்படம் இதுதான் – 18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டி தடாலடி பேச்சு.!

keerthy-shetty
keerthy-shetty

நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பாலாவுடன் கைகோர்த்து வணங்கான் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அண்மையில்  இவர் நடித்து தயாரித்து வெளிவந்த சூரறை போற்று திரைப்படம் அதிக விருது பட்டியலில் இடம் பெற்றது. இந்த செய்தியை அறிந்த சூரறை போற்று படக்குழு மற்றும் சூரியா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

சூர்யாவும் இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் மகிழ்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறார். வணங்கான் படத்தை தொடர்ந்தும் அடுத்து சில இயக்குனர்களுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் முதலாவதாக வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. வணங்கான் படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக தெலுங்கு இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளார் என அண்மையில் தகவல் வெளிவந்துள்ளன.

முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி தூத்துக்குடி அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் கிராமம் போன்ற செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு வந்தது. அந்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதனிடையே இந்த படத்தின் கதாநாயகி கீர்த்தி ஷெட்டி வணங்கான் படத்தில் நடிப்பது குறித்து சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசியது வணங்கான் படத்தில் நான் நடிப்பது எனக்கு அதிர்ஷ்டமாக கருதுகிறேன். அதுவும் சூர்யா உடன் இணைந்து நடிப்பது சிறந்த அனுபவம் இந்த படம் எனக்கு ஒரு கனவு படம் மாதிரி, என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படமாக வணங்கான் படம் இருக்கும் என கீர்த்தி ஷெட்டி தெரிவித்துள்ளார்.