என்னுடைய ஆல் டைம் “பேவரைட் திரைப்படம்” இதுதான் – வெளிப்படையாக சொன்ன நடிகர் கார்த்தி.!

karthi
karthi

நடிகர் கார்த்தி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் முத்தையாவுடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து விருமன் திரைப்படத்தில் நடித்தார் இந்த படம் அண்மையில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது விருமன் திரைப்படத்தில் கார்த்தி உடன் கைகோர்த்து அதிதி சங்கர்.

மற்றும் மைனா நந்தினி, சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ், மனோஜ், சூரி, சிங்கம் புலி, ராஜ்கிரண் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் இந்த படம் தொடர்ந்து நல்ல வரவேற்பு பெற்று வருவதால் வசூலிலும் அடித்து நொறுங்குகிறது இதுவரை மட்டுமே இந்த திரைப்படம் சுமார் 40 கோடிக்கு மேல் வசூல் அள்ளியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி கையில் சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் கைவசம் இருகின்றன இந்த படங்களும் அடுத்தடுத்து வெளிவர ரெடியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் விருமன் படம் குறித்தும் நடிகர்கள் குறித்தும் பேசினார் அப்பொழுது அவரிடம் நடிகர் விஜய் குறித்து கேள்வி எழுப்பினர் அதற்கு அவர் பதில் அளித்தது.

எனக்கு ரொம்பவும் பிடித்த திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும் விஜய்யின் இந்த படம் 1999 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து சிம்ரன், மணிவண்ணன், தாமு மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்துமே ஹிட் அடித்தன.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே எனக்கு ரொம்பவும் பிடிக்கும். விஜயின் ரசிகர்களின் ஒருவராக அவரையும், படத்தையும் தூரத்தில் இருந்து ரசிக்க மட்டுமே விரும்புகிறேன் என கூறினார். இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.