தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் டாப் ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடித்து அசத்தி வருகிறார் இதனால் இவரது மார்க்கெட்ட கீழே இறங்காமல் உச்சத்திலேயே இருக்கிறது. சினிமா உலகில் வெற்றியை கண்டு வந்த நடிகை நயன்தாரா.
இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக காதலித்து ஓடிக்கொண்டு இருந்தார் ஒரு வழியாக கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி உறவினர்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரது முன்னிலையிலையும் மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு இந்த ஜோடி சினிமா, வாழ்க்கை என இரண்டையும் சூப்பராக பிரித்தது.
தற்பொழுது வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழ்ந்து வருகின்றனர். இப்பொழுது கூட நடிகை நயன்தாரா கையில் காட்பாதர், கனெக்ட், கோல்ட், நயன்தாரா 75, ஜவான், AK 62 ஆகிய திரைப்படங்கள் கைவசம் இருகின்றன.. இத்தனை திரைப்படங்கள் இருந்தாலும் அது அதற்கு என்ன டேட்டை சரியாக ஒதுக்கி வைத்துக் கொண்டு சீக்கிரம் நடித்து முடித்துவிட்டு..
தனது ஆசை கணவர் விக்னேஷ் சிவனுடன் ஊர் சுற்றுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அப்படி அண்மையில் இவர் ஸ்பெயின் நாட்டிற்கு போய் வந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பெரிய அளவில் வைரலானது அதனைத் தொடர்ந்து இவர்களைப் பற்றிய செய்திகள் வெளி வந்து கொண்டு தான் இருக்கிறது
இப்படி இருக்கின்ற நிலையில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பிடித்த உணவு என்பது குறித்தும் நமக்கு தகவல் கிடைத்துள்ளது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு மிகவும் பிடித்த சாப்பாடு ஹைதராபாத் பிரியாணி தான் அது மட்டும் இல்லாமல் சீன உணவு வகைகளை கூட விரும்பி உண்பார் என சொல்லப்படுகிறது.