தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிகர் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார்.
அந்த வகையில் இவரின் சிறந்த நடிப்புத் திறமையாலும் அழகாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அந்த வகையில் இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் குண்டாகும் கும்மென்று மிகவும் அழகாக இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தனது உடல் எடையை மிகவும் குறைத்து ஸ்லிம்மாக மாறியதால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென்று இருந்த மார்க்கெட் கொஞ்சம் குறைந்தது.
அந்த வகையில் இவருக்கு திரைப்படங்களும் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை இல்லை. இந்த நிலையில் கிடைத்த சில வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தற்போது தமிழில் அண்ணாத்த மற்றும் சாணி காகிதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது மலையாளத்தில் மோகன்லால் உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வரும் மரைக்காயர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் பாட்டியும் பல படங்களில் நடித்து உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் பாட்டியாக நடித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.