கமலின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்.? அதுவும் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப் போகிறதாம்.

kamal-
kamal-

80 காலகட்டங்களில் இருந்து சினிமாவில் நடிக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் தனது நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்டு  ஒவ்வொரு படத்திற்கும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி படுத்துவதோடு மட்டுமல்லாமல் தனது உடலையும் அதற்கு ஏற்றார் போல மாற்றிக் கொண்டு சினிமாவுலகில் பயணிப்பதால் அவரை இன்றும் மக்கள் மற்றும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர்.

சினிமாவே கதியேன என கடந்த கமல் ஒரு கட்டத்தில் அதை விட்டு விட்டு மற்றவற்றில் கவனம் செலுத்தினார் அவர் அரசியல், வியாபாரம் மற்றும் தொகுப்பாளர் என பலவற்றில் தனது கவனத்தை செலுத்தி அதிலும் வெற்றி கண்டு வருகிறார் இது ஒரு பக்கம் இருக்க சில வருடங்கள் கழித்து மீண்டும் சினிமா உலகில் நடிக்க வந்துள்ளார்  ஆம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் விக்ரம்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது இதை முடித்த கையோடு உலகநாயகன் கமலஹாசன் அடுத்தடுத்து பல்வேறு இயக்குனர்களுடன் கதையை கேட்டு நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அந்தவகையில் கமல் வெற்றிமாறன் ஒரு படமும் அதன் பிறகு பா ரஞ்சித்துடன் ஒரு படம் பண்ண இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் கமல் பா ரஞ்சித் இணையும் படம் குறித்து ஒரு சூப்பர் தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் உலா வருகிறது. அதாவது கமலும் அவரும் இணையும் படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பா ரஞ்சித் ஆரியா வைத்து சார்பட்டா பரம்பரை  என்னும் ஒரு உண்மை சம்பவத்தை படமாக கொடுத்து நிலையில் பா ரஞ்சித், கமல் படத்திலும் அது போன்ற ஒரு  உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக  இருப்பதால் இதுவும் ஒரு பிளாக்பஸ்டர் படம் என இப்போதே ரசிகர்கள் கூறிய கொண்டாடி வருகின்றனர்.