நடிப்புக்கு பேர்போன உலகநாயகன் கமல்ஹாசன் மீண்டும் சினிமா உலகில் நடித்து வருவது தற்போது அவரது ரசிகர்களையும், மக்களையும் சந்தோஷப்படுத்தி உள்ளது முதலாவதாக இவர் லோகேஷ் கனராஜ் உடன் கைகோர்த்து விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் பாதி முடிவடைந்த நிலையில் மீதி முடிவடைந்து அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஷங்கரும் கமலும் இணைந்து பணியாற்றி இந்தியன் 2 பட்டப் படிப்பு பாதியிலேயே கடந்த நிலையில் தற்போது சமரச பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் வெகுவிரைவிலேயே எடுக்கப்பட உள்ளது .
கமல் இந்த திரைப்படத்தில் நடிக்க தற்போது அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி உள்ளார். வெள்ளித்திரையில் இப்படி என்றால் சின்னத்திரையில் பிக்பாஸ் 5 வது சீசனையும் தற்போது சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்கி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் கமல் அடுத்தடுத்த நல்ல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக சமீபத்திய தகவல்கள் கசிந்து.
இந்த நிலையில் அவர் அடுத்ததாக பா. ரஞ்சித் கூட்டணியில் சேர இருப்பதாக தகவல்கள் கசிகின்றன. கமல் விக்ரம், இந்தியன் 2 படத்தை முடித்த பிறகு அடுத்ததாக ரஞ்சித் உடன் கை கோர்த்தது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய படங்களை அடுத்து கொடுத்து அசத்தியவர்.
பா ரஞ்சித் சமீபத்தில் கூட யாரும் எதிர்பார்க்காத சார்பட்டா பரம்பரை கொடுத்து மக்களின் மனதிலும் நல்ல இடத்தைப் பிடித்துள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் கமலும் இணைந்தால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இருவரும் முதல் முறை இணைவார்கள்.