இந்தியாவின் சிறந்த படம் இது தான்!! இவர் தான் சிறந்த நடிகர் என யாரைப் பாராட்டுகிறார் நடிகர் சதீஷ் ?

sathish
sathish

Actor sathish about ramana movie: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் இரண்டு வாரக் காலங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள், சினிமா துறை பிரபலங்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் இருந்தபடியே நடிகர், நடிகைகள் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  அந்த வகையில் நகைச்சுவை நடிகர் சதீஷ் 2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இவர் இதனைத்தொடர்ந்து மதராசபட்டினம், மெரினா, தாண்டவம், எதிர்நீச்சல், மான் கராத்தே, கத்தி, றெக்க, ரெமோ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதனால் மக்களுக்கு போரடிக்காமல் இருப்பதற்காக தொலைக்காட்சிகளில் திரைப்படங்களை ஒளிபரப்பி வருகின்றனர்.

இன்று தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட ரமணா படத்தை பார்த்து நடிகர் சதீஷ் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இந்தியாவில் வெளியான சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என அவர் ரமணா படத்தைக் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் விஜயகாந்த் சார் ஒரு அருமையான நடிகர் எனவும் கூறியுள்ளார். மேலும் ஏ ஆர் முருகதாஸ் அவர்களை சிறந்த இயக்குனர் என்றும் கூறியுள்ளார். இந்த படத்தில் வரும் ”யாரு சாமி அவன் எனக்கே அவர பாக்கணும் போல இருக்கு” எனும் டயலாக் அனைவருக்கும் பிடித்தது என கமெண்ட் செய்துள்ளனர்.