தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பிரபலங்கள் சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு உணர்ந்து கொண்டு பயணிக்கின்றனர். சினிமாவில் நடக்கும் ஒவ்வொரு செயல்பாட்டையும் நன்கு உணர்ந்து ஏற்றவாறு ஒருவர் மற்றும் தயாரிப்பாளர்களை செலக்ட் செய்து நடிக்கின்றனர் அதிலும் அவர்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து அவர்களுடனேயே பயணிக்கின்றனர் டாப் நடிகர்கள்.
அந்த வகையில் அண்மை காலமாக அஜித் ஒரு சில இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தொடர்ந்து தனது படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். சிறுத்தை சிவாவுடன் அஜித் நான்கு படங்கள் பணியாற்றிய நிலையில் அடுத்ததாக ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையும் இணைந்து இவற்றை இருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தயாரிப்பாளர் போனி கபூர் மூன்றாவது முறையாக இணைய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. AK 61 படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்க இருக்கிறார். வலிமை படம் வெளிவருவதற்கு முன்பாக 61படத்தை உருவாக படக்குழு ரெடியாகி உள்ளது.
இயக்குனர் வினோத் செயல்பாடு அஜித்துக்கு அடுத்துள்ளது மேலும் கதை படமும் வித்தியாசமாக இருப்பதால் சந்தோஷத்தில் தொடர்ந்து நடிப்பதாக தெரியவந்துள்ளது. இப்படியிருக்க 61 வது திரை படத்தில் அஜீத்தை மாறுபட்ட கோணத்தில் காட்ட சிறப்பான கதை ஒன்றை சொல்லி உள்ளாராம் அந்த கதை முழுக்க முழுக்க அஜித்திற்கு நெகட்டிவ் ரோல் என தெரியவந்துள்ளது.
ஏற்கனவே அஜித் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த திரைப்படமும் தற்போது நல்லதொரு வெற்றியை ருசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அஜித் குமார் வேற லுக்கில் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது ஆம் இதுவரை நீங்கள் பார்க்காத அஜித்தை இந்த படத்திலும் பார்க்க முடியும் என அவர் கூறியுள்ளார்.