தளபதி விஜய் தனது 66 வது திரைப்படம் ஆன வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார் இவர் இதற்கு முன்பு எடுத்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் சூட்டிங் ஹைதராபாத் சென்னை என பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் மற்றும் சரத்குமார் பிரகாஷ்ராஜ் ஷாம் ஸ்ரீகாந்த் யோகி பாபு ஜெயசுதா போன்ற பல நட்சத்திர நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஒரு படமாக..
உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு கோலாகலமாக வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக ரசிகர்களை சந்தோஷப்படுத்த இதுவரை இரண்டு மூன்று போஸ்டர்கள் மட்டுமே வெளிவந்துள்ளன இப்படி இருக்கின்ற நிலையில் ஏதேனும்..
அப்டேட் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என எதிர்நோக்கி இருந்த நிலையில் தற்பொழுது பிரபல சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்பராயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சூப்பரான தகவலை கொடுத்துள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால்.. வாரிசு திரைப்பட அனுபவம் குறித்து பதிவிட்டு இருக்கிறார் தெறி திரைப்படத்திற்கு பிறகு விஜய் உடன் பணிபுரிந்து இருக்கிறேன்.
இந்த திரைப்படத்தில் ஜாலியான அதே நேரம் அதிரடியான சண்டை காட்சிகள் இருக்கிறது என அவர் சொல்லி உள்ளார் திலீப் சுப்பராயன் எடுத்துள்ள பெரும்பாலான படங்களில் ஆக்சன் சீன்கள் வேற லெவலில் இருக்கும் அந்த வகையில் இந்த படமும் நிச்சயம் ஒரு மாபெரும் ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என ரசிகர்கள் இப்பொழுது கணக்குப் போட்டுள்ளனர் மேலும் இந்த திரைப்படம் வெற்றி பெறவும் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.