தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் பிரியா ஆனந்த் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் ஜெய் நடிப்பில் வெளியாகிய வாமணன் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். அதேபோல் வாமனன் திரைப்படம் தான் இவருக்கு முதல் திரைப்படம்.
ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிரியா ஆனந்த் முன்னணி நடிகையாக வலம் வரவில்லை என்றாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார் இவர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியாகிய எல்கேஜி என்ற திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜி தேர்தலில் வெற்றிபெற வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். தற்பொழுது இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையாமல் இருந்து வருகிறார்.
இவர் நடிப்பில் தற்போது சுமோ என்ற திரைப்படம் மட்டும் உருவாகி வருகிறது. சமீபத்தில் பிரியா ஆனந்த் ஃபேர்னஸ் போன்ற விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும் அந்த வீடியோவில் நான் மாடலிங் கூட செய்ததே கிடையாது ஆனால் எனக்கு நிறைய படவாய்ப்புகள் வந்துள்ளது அதை எல்லாம் உதறி தள்ளி உள்ளேன்.
மேலும் அந்த வீடியோவில் வெள்ளையாக இருப்பது தான் அழகு என்று சொல்வது முட்டாள்தனமான விஷயம், நம்முடைய தைரியம் நம்பிக்கை தான் நமது வெற்றிக்கு காரணம் அதேபோல் தென்னிந்திய பெண்களிடம் முகத்தில் இருக்கும் கலை கண்களில் இருக்கும் ஸ்பார்க் எங்குமே கிடைக்காது. அதேபோல் பாலிவுட் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிய ஸ்ரீதேவி தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்தான் அதேபோல் தீபிகா படுகோனே அவர்களும் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்தான்.
தென்னிந்திய பெண்களின் முகத்தில் இருக்கும் கலை வேறு எந்த பெண்களின் முகத்திலும் கிடையாது அதை விட்டுவிட்டு ஃபேர்னஸ் கிரீம் போட்டால்தான் அழகு என விளம்பரத்தில் நடிப்பதற்காக மும்பையில் இருந்துநடிகையை கொண்டு வந்து நடிக்க வைப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது இதற்காக எவ்வளவு பணம் கொடுத்தாலும் என்னால் நடிக்க முடியாது என கூறியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது இவர் நடித்துள்ள சுமோ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது அதேபோல் RDX ஜென்ம்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் எ சிம்பிள் மருடர் என்ற புதிய வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இப்படி இருக்க அடிக்கடி சமூக வலைத்தளத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் ப்ரியா ஆனந்த் திடீரென புத்தர் சிலைக்கு முன்பு பின்பக்கம் அப்பட்டமாக தெரியும்படி உடை அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் புத்தர் சிலை முன்பு இப்படியா உடை அணிந்து நிற்பது என மோசமாக விமர்சித்து வருகிறார்கள் ரசிகர்கள்.