அஜித்தின் திறமையை முற்றிலுமாக வெளிகாட்ட புதிய கதையை ரெடி பண்ணி வச்சியிருக்கும் வினோத் – AK 61 படம் மிரட்டுமாம்…

AJITH
AJITH

அஜித் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருவதால்  அவரது அடுத்த அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எகிறி கிடக்கிறது. அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படமும் அடுத்த பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

இதை வெற்றிகரமாக படக்குழு வெளியிட்ட பின் இதே படக்குழு அடுத்தாகவும் இணையப் போவதாக தகவல்கள் வெளிவருகின்றன ஹச். வினோத்  AK 61 திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். ஹச். வினோத்திடம் பல்வேறு விதமான கதைகள் இருக்கிறது என்பதை அவர் பல்வேறு மேடைகளில் கூறிய வண்ணமே இருக்கின்றன.

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சிறப்பான கதையை வைத்திருக்கிறாராம் அதில் ஒரு கதையை தான் அஜித்தை வைத்து படமாக எடுக்க இருக்கிறாராம். ஆம் அந்த படத்தில் அஜித் உலக அளவில் மக்கள் சந்திக்கும் சமூக பிரச்சனைகளை பேசும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் குறைவாகவும் வசனங்கள் அதிகமாகவும் இருக்கும் என தெரியவந்துள்ளது.

இதனால் ஒரு புதிய பாணியில் நாம் அஜித்தை பார்க்க முடியும் என தெளிவாக தெரியவருகிறது இதனையடுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்தார். சமீபகாலமாக நடிகர் அஜித் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

கிராமத்து சப்ஜெக்ட், சமூக அக்கறை அதனை தொடர்ந்து உலக அளவில் பிரச்சனைகளை சந்திக்கும் விஷயங்கள் என இப்படி அடுக்கடுக்காக பல வித்தியாசமான படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விழிப்புணர்வும் கொடுக்கிறார் அதேசமயம் சந்தோஷத்தையும் கொடுத்து வருகிறார்.இதனால் AK ரசிகர்கள் செம உற்சாகத்தில் இருக்கின்றனர்.