பெண்ணாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தன்னுடைய திருமண வாழ்க்கையை பற்றி பல்வேறு ஆசைகளும் கனவுகளும் இருப்பது வழக்கம்தான். அந்த வகையில் தனக்கு வரப்போகும் கணவரை பற்றி பல்வேறு கனவுகள் கண்டிருப்பார்கள். இந்நிலையில் பிரபல நடிகையும் தன்னுடைய வருங்கால கணவனை பற்றிய கனவுகளை கோரியுள்ளார்.
நடிகை ராசி கண்ணா தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆனால் இவர் அறிமுகமானது என்னவோ தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான். இவ்வாறு அவர் தெலுங்கில் மதராஸ் காஃபே என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தில் இவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பெருமளவிற்கு ரசிகர் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் இமைக்க நொடிகள் இல்லை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அடங்கமறு என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்சமயம் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதாகவும் கூறமுடிகிறது.
இந்நிலையில் அவரிடம் உங்களுடைய வருங்கால கணவர் பற்றிய கனவுகளை கூறுங்கள் என்று கேட்டுள்ளார்கள் அதற்கு பதிலளித்த ராசி கண்ணா நான் திருமணத்தை பற்றி எந்த யோசனையும் இல்லை என்று கூறியது மட்டுமில்லாமல் தனக்கு வரப்போகும் கணவன் கடவுள் பக்தி அதிகம் உள்ளவராக இருக்க வேண்டும்.
மேலும் அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும் என்று கூறியது மட்டுமில்லாமல் நிறம் எனக்கு முக்கியம் இல்லை என்றும் கூறி உள்ளார் இதன் காரணமாக ரசிகர்கள் பலர் சாமியாராக இருக்கும் நபர்கள் அனைவரும் அட்மிஷன் போடுங்கள் என கிண்டல் அடித்து வருகிறார்கள்.