நடிகர் தனுஷ் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் மாறன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் இதில் நானே வருவேன் திரைப்படம்.
வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது இந்த திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷின் ஹாலிவுட் திரைப்படமான க்ரே மேன் படமும் வெளிவர உள்ளது அதற்கு முன்பாக அந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் தனுஷ் ஹாலிவுட் திரைப்படமான க்ரே மேன் படத்தின் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். எப்படி இந்த படத்தில் நடித்தேன் என எனக்கும் தெரியவில்லை என காமெடியாக கூறினார்.
மேலும் ஒரு நாள் casting ஏஜென்சியிலிருந்து என்னிடம் பேசினார்கள் ஒரு ஹாலிவுட் படம் இருக்கிறது நடிக்கிறீர்களா எனக் கேட்டார்கள் அது என்ன படம் என முதலில் சொல்லுங்க என கேட்டேன் அது பெரிய படம் முதலில் நடிக்கிறீர்களா இல்லையா என பதில் கூறுங்கள் என கேட்டனர்.
நான் விவரங்கள் கேட்டு எனக்கு சப்ரைஸ் ஆக இருந்தது அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன் என தனுஷ் வெளிப்படையாக கூறினார். நடிகர் தனுஷின் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளிவர ரெடியாக இருப்பதால் அவரது சினிமா பயணம் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்கும் என தெள்ளத் தெளிவாக தெரிகிறது.