தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது மட்டுமில்லாமல் மாபெரும் வெற்றி பெறும் என ரசிகர்கள் நினைத்தார்கள் ஆனால் அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துவிட்டது இந்த திரைப்படம்.
இவ்வாறு இந்த திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றாலும் வசூலில் பெருமளவு சாதிக்கவில்லை என்றே சொல்லலாம் பொதுவாக இந்த திரைப்படத்தைப் பார்த்தவர்கள் அனைவருமே தளபதி ரசிகர்கள் மட்டுமே. அந்த வகையில் பிற ரசிகர்களை இந்த திரைப்படம் கவரவில்லை என்று சொல்லலாம்.
இந்நிலையில் தற்பொழுது தளபதி விஜய் தான் நடிக்கும் 60வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது அந்த வகையில் இந்த திரைப்படத்தினை இயக்குனர் வம்சி இயக்குவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் ஒரு குடும்ப கதாபாத்திரம் கொண்ட திரைப்படமாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆனால் இந்த திரைப்படத்தை காட்டிலும் தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தான் ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படம் கேங்ஸ்டர் கதை அம்சம் கொண்ட திரைப்படமாக வெளிவர உள்ளதாகவும் அதில் தளபதி விஜய் தன்னுடைய சொந்த வயதில் நடிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார்கள்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் எப்பொழுது படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் அப்டேட் காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.