“சுறா” படத்தில் தளபதி விஜய் சிக்கியது இப்படிதான் – அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்..

vijay
vijay

தளபதி விஜய் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் கடந்த பொங்கலை முன்னிட்டு விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது. அதனைத் தொடர்ந்து தோல்வியை சந்திக்காத இயக்குனர் பெயரை எடுத்த லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து தளபதி விஜய் “லியோ” படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் முதல் கட்டப்படிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது அதே சமயம் அங்கிருந்து புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது. லியோ படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக அமையும் என சொல்லப்படுகிறது. படத்தில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், சஞ்சய் தத், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் மற்றும் அவரது படம் பற்றிய பழைய மற்றும் புதிய செய்திகள் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போ விஜய்  நடித்த சுறா படம் பற்றி ஒரு தகவல்ல் தான் தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி கேரியரில் மிக மோசமான திரைப்படம் என்றால் அது சுறா தான் அந்த அளவிற்கு இந்த படத்தை பலரும் ரோல் செய்து இப்பொழுதும் வருகின்றனர். சுறா படத்தின் கதையே சரியில்லை நமக்கே தெரிகிறது.  இதில் விஜய் எப்படி நடிக்க ஒப்புக்கொண்டார் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.

அதற்கான பதில் தற்போது கிடைத்திருக்கிறது நடிகர் மனோபாலா ஒரு முறை விஜியிடம் நீங்கள் ஏன் சுறா படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டீர்கள் என கேட்டுள்ளார் அதற்கு விஜய் சொன்னது.. இயக்குனர் கதை சொல்லும் போது சொன்ன மாஸ் வசனங்கள் கேட்டு தான் ஓகே சொல்லிவிட்டேன் என விஜய் கூறினாராம்.