கேமராவுக்கு முன்னாடியும், பின்னாடியும் “விஜய் ” இப்படி தான் நடந்து கொள்வார் – ரகசியத்தை பகிர்ந்த சினேகா.!

vijay
vijay

தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் தற்பொழுது தனது 66-வது திரைப்படமான வாரிசு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து ரிலீஸ் ஆகிறது அதற்கு முன்பாக ரசிகர்களை கவர்ந்து இழுக்க அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது.

இது ஒரு பக்கம் மறுபக்கம் தனது அடுத்த படத்திற்கான வேலைகளையும் விஜய் பார்த்து வருகிறார். ஆம் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து தனது 67வது திரைப்படத்தில் விஜய் நடிகர் திட்டம் போட்டு இருக்கிறார்  இந்த நிலையில் நடிகை சினேகா தளபதி விஜய் குறித்து சில தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

சினேகாவும், விஜய்யும் சேர்ந்து செல்வ பாரதி இயக்கத்தில் உருவான வசீகரா திரைப்படத்தில் நடித்திருந்தனர் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தும்  கலந்த ஒரு திரைப்படமாக உருவாகியது இந்த படம் அப்பொழுது வெளியாகி வேற லெவல் வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தில் விஜய் நடிப்பு, திறமை மற்றும் அவரது நடந்து கொள்ளும் விதத்தை..

கண்டு மெய்சிலிர்த்து போனார்  சினேகா  தற்பொழுது சமீபத்திய பேட்டி ஒன்று அதை வெளிப்படையாக கூறியுள்ளார் விஜய் பற்றி சினேகா சொன்னது விஜய் மிகவும்  அமைதியாக எல்லோருக்கும் மரியாதை கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த மனிதர் காமெடி காட்சியில் அசால்டாக நடித்து முடித்ததும்..

உடனே அமைதியாக அவர் போல் ஆகிவிடுவார் கேமரா முன் விஜய் கேமரா பின் அவர் போல் அப்படியே அமைதியாக இருப்பார் என சந்தோஷமாக கூறியுள்ளார் சினேகா. இந்த தகவல் தற்போது தளபதி ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.