ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் இப்படிதான் கிடைத்தது.! பல வருடம் கழித்து வெளியான ரகசியம்.!

rajini
rajini

ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் சாதாரண வில்லனாக நடித்து அதன் பின்பு தொடர்ச்சியாக கதாநாயகன் அவதாரம் எடுத்து தற்பொழுது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த் மேலும் இவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் எப்படி வந்துள்ளது என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதன்படி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியான பைரவி திரைப்படத்தை கொண்டாடும் விதமாக இத்திரைப்படத்தின் கட்டவுட்டுகளில் தான் முதல் முதலாக சூப்பர் ஸ்டார் என்ற டைட்டில் எழுதப்பட்டது.

ஆனால் இந்த சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலை திரையில் காட்டியது 1984 ஆம் ஆண்டு வெளியான நான் போட்ட சவால் திரைப்படத்தின் மூலம் தான் ஆம் சூப்பர் ஸ்டார் என்ற டைட்டில் முதன்முதலாக இந்த திரைப்படத்தில் தான் காண்பிக்கப்பட்டதாம்.மேலும் இதனைத் தொடர்ந்து அண்ணாமலை திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் என்ற டைட்டில் கார்டு தான் மிக மாசாக இருந்திருக்கும் நீல நிற பல்புகள் வரிசையாக எரிவது போல் சூப்பர் ஸ்டார் என்று காண்பிக்கப்படும்.

rajini
rajini

இந்த டைட்டில் தான் இப்பொழுது வரை ரசிகர்களின் மனதில் இருந்து கொண்டு வருகிறது மேலும் இந்த டைட்டில் கார்டுக்காக இந்த திரைப்படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இசையமைப்பாளர் தேவாவிடம் தனி பின்னனி இசையை உருவாக்க கூறி அதன் பின்பு இந்த டைட்டில் கார்டு மாஸாக இருந்திருக்கும்.

மேலும் தற்பொழுது இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருவது மட்டுமல்லாமல் ரஜினி அடுத்ததாக எந்த திரைப்படத்தில் நடிப்பார் அந்த திரைப்படத்தின் அப்டேட் இருக்குமா என்று பலவிதமான கேள்விகளை எழுப்பி வருவது மட்டுமல்லாமல் பலரும் ரஜினியின் அடுத்த திரைப்படம் உருவாவதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.