இயக்குனர் சுந்தர் சி தமிழ் சினிமா உலகில் முதலில் இயக்குனர் அவதாரம் எடுத்திருந்தாலும் அண்மை காலமாக படங்களிலும் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். இதனால் சினிமா உலகில் அவரது மார்க்கெட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் அரண்மனை திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி.
காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், யோகி பாபு, திவ்யதர்ஷினி என பல நட்சத்திர பட்டாள்கள் நடித்து உள்ளன. இந்த படத்தை தொடர்ந்து பல படங்களை இயக்கியும் நடித்து ஓடிக் கொண்டிருக்கும் சுந்தர் சி. இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினி குறித்து வெளிப்படையாக பேசினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னுடைய உள்ளத்தை அள்ளித்தா படத்தை பார்த்துவிட்டு சந்தோஷப்பட்டார் மேலும் நாம் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணும் என கேட்டுக் கொண்டார் அதன் பிறகு தான் நாங்கள் இருவரும் இணைந்து அருணாச்சலம் என்ற படத்தில் பணியாற்றினோம் அந்த படம் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது.
அருணாச்சலம் படம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது ரஜினியின் அணுகுமுறை எப்படி இருந்தது என்பது குறித்து வெளிப்படையாக கூறி உள்ளார். ரஜினிக்கு புதிய இயக்குனர்கள் பணி புரிவது ரொம்பவும் பிடிக்கும் கலைஞர்களை கன்ஃபார்மாக பீல் செய்யும் வகையில் நடந்து கொள்வார் அருணாச்சலம் படத்தின் கேமராமேன் அவ்வபொழுது சிகரெட் பிடிக்க செல்லும் பொழுது ரஜினிகாந்த் அவர்களும் சென்று சிகரெட்டை கொடுத்து பற்ற வைத்து சகஜமாக பழகுவார்.
அதேபோல ஒரு விஷயம் தனக்கு பிடிக்கவில்லை என்றால் முதலில் நன்றாக இருக்கிறது என்று கூறுவாராம் பின்னர் ஒரு நாள் கழித்து சொல்லும் பொழுது நீங்கள் சொன்ன விஷயத்தை யோசித்துப் பார்த்தேன் இந்த விஷயம் இப்படி இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று தான் சொல்வாரே தவிர நான் சொன்னது பிடிக்கவில்லை என்று எப்பொழுதும் ரஜினி சொல்லவே மாட்டார் என சுந்தர் சி வெளிப்படையாக கூறினார்.