Rajini : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் கடைசியாக நடித்த தர்பார், அண்ணாத்த படங்கள் சுமாராக ஓடியதால் அடுத்த படம் மிகப்பெரிய ஒரு ஹிட் படமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டார்.
அப்படி நெல்சன் சொன்ன கதை ரொம்ப பிடித்து போகவே ஜெயிலர் என்ற பெயரில் அதிரடியாக உருவானது ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் உலகம் முழுவதும் வெளியானது படம் ஆக்சன், காமெடி, எமோஷனல் என அனைத்தும் கலந்து இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இப்பொழுது வரை வெற்றி நடை கண்டு வருகிறது.
இதுவரை மட்டுமே 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து லால் சலாம் மற்றும் ஜெய் பீம் இயக்குனருடனும் சேர்ந்து படம் பண்ண இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ரஜினியை பற்றி பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசி உள்ளது வைரலாகி வருகிறது.
அவர் சொன்னது என்னவென்றால் “சிறகை விரி பற” என்ற ஒரு நூலை எழுதியிருந்தேன். அப்பொழுது ராஜா முன்னுரை ரஜினியை கேளுங்கள் என கூறினார் அப்பொழுது நான் அவர் எவ்வளவு பெரிய ஆள் நமக்கெல்லாம் வருவாரா என யோசித்தேன் இருப்பினும் அவருடைய உதவியாளருக்கு போன் செய்து பேசினேன் ரஜினி அதற்கு ஓகே சொல்லி ஒரு பக்கம் நீளமுள்ள முன்னுரையை எங்களுக்கு அனுப்பினார்.
பிறகு நான் “சிறகை விரி பற” என்ற புக்கை எடுத்துக்கொண்டு அவரது இல்லத்திற்கு சென்றேன் என்கூட என் குடும்பத்தினர் வர ஆசைப்பட்டார்கள் ஆனால் நானே அவரை முதல் முறை பார்க்கப் போவதால் எனக்கே பதட்டமாக இருந்தது நான் வேறு ஒரு காரில் சென்று இருந்தேன் உள்ளே போன என்னை அவர் வரவேற்றார் அவருடைய எளிமை என்னை வியக்க வைத்தது நான் முரட்டுக்காளை படம் குறித்து அவரிடம் சொன்னேன் ஏனென்றால் நான் ரஜினியின் மிகப்பெரிய ஃபேன் என கூறினார்.
பேசி முடித்துவிட்டு வெளியே வந்தேன் அவரும் கார் வரை வந்து எங்களை அனுப்பி வந்தார் அப்பொழுதுநான் வந்த கார்ன் டிரைவர் ரஜினியை பார்த்து பரவசமடைந்து அங்கேயே கீழே விழுந்து கும்பிட்டு விட்டார் ரஜினி எனக்கு எவ்வளவு மரியாதை கொடுத்தாரோ அதேபோல அந்த டிரைவர் கிட்டையும் நேரில் வந்து கை கொடுத்தார். அந்த அளவிற்கு மதிக்கவும், மரியாதையும் கொடுக்க தெரிந்தவர் என கூறி உள்ளார்.