இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமாவிற்கு எத்தனையோ சிறந்த படைப்புகளை கொடுத்திருந்தாலும் இவர் கடைசியாக எடுத்த தனது கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய ஒரு சாதனை படைத்தது.
இயக்குனர் மணிரத்தினம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படமாக எடுத்தார். அது நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்தார் அதன்படி முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றதன்..
காரணமாக இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்தது இதுவரை மட்டுமே பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் 500 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன குறிப்பாக தமிழகத்தில் மட்டுமே இந்த திரைப்படம் 234 கோடி வசூலித்து இருக்கிறதாம் இன்னமுமே பல இடங்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் 28ஆம் தேதி கோலாகலமாக ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நேற்று பட குழுவினர் பொன்னியின் செல்வன் வெற்றியை கொண்டாடினர் அப்பொழுது அந்த நிகழ்ச்சியில் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி மணிரத்தினம் தயாரிப்பாளர் தமிழ் குமரன் என பலர் கலந்து கொண்டனர்..
அப்பொழுது பிரபலங்களும் பேசினர் அதில் ஒருவராக இயக்குனர் மணிரத்தினமும் பேசினார் அதில் அவர் சொன்னது.. பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க வேண்டும் என்று சுபாஷ் கரனிடம் கூறினேன் 2 நிமிடத்தில் பண்ணலாம் எனக் கூறிவிட்டார். அதன் பிறகு பொன்னியின் செல்வன் உருவாகியது இந்த படத்தில் பணியாற்றிய டெக்னீஷன்கள் மேக்கப் கலைஞர் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நன்றி கூறுவதாக கூறினார்.