நானும், நயன்தாரவும் இப்படி தான்.! புகைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு விஷயத்தை சொன்ன ஜோடி.! புகைப்படத்தை உத்து பார்க்கும் ரசிகர்கள்.

nayanathara

தென்னிந்திய திரை உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாரா பல  முன்னணி நடிகர்களை காதலித்தாலும் கடைசிவரை யாருடனும் சேராமல் இருந்து வந்த நிலையில் கடைசியாக இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகிறார்.

இதனால் ரசிகர்களும் நீங்களாவது அவரை கைவிட்டு விடாமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர் ஆனால் இதற்கு விக்னேஷ் சிவன் பதில்படிக்காததால் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

இது சமூக வலைதளப் பக்கத்தில் மிகப்பெரிய அளவில் பூதாகரமாக வெடித்து நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இதுபற்றி எந்த ஒரு பேச்சையும் பேசவில்லை. மேலும் சமீப காலமாக இவர்கள் இருவரும் இணைந்து எந்த ஒரு போட்டோ  வெளிவராமல் இருப்பதால் இவர்கள் சேர்ந்து இருக்கிறார்களா இல்லையா என்பது பெரிய குழப்பத்தில் இருந்தது.

இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் உருவாகி வரும் பாட்டு என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதால் திடீரென கொச்சி சென்றபோது அவருடன் விக்னேஷ் சிவன் இருந்தார். இருவரும் கைகோர்த்து கீழே இறங்கி வந்த புகைப்படம் வெளிவந்ததால் ரசிகர்களின் கேள்விக்கு பதிலாய் இந்த புகைப்படம் இருந்தது என்று கூறி சந்தோஷம் அடைந்து வருகின்றனர்.

இருவரும் வெகு விரைவிலேயே திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வலம்வர தற்போதே வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

nayanthara
nayanthara